தேனி மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பர் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் .
17 வயது சிறுமி ஒருவரை கடந்த மாதம் 9 ஆம் தேதி காணவில்லை எனக் கூறி அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன 17 வயது சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர் .
காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் சிறுமி தேவாரம் அருகே உள்ள ஒரு கிராமப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று 17 வயது சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமியின் ஊரை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (32) என்பவர் சிறுமியை கூட்டி சென்றது தெரியவந்தது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முருகன் கூட்டிச் சென்று அவரது நண்பரது வீட்டில் ஒரு மாத காலமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முருகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அவரது நண்பரான கேசவன் என்பவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முருகன் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #சிறப்புசெய்திகள் #தேனி #குழந்தைதிருமணம்