ராணிப்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 மாவட்டங்களில் 39 ஒன்றியங்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது பிரச்னை ஏற்பட்டது.
குறிப்பாக ராணிப்பேட்டையில் தேர்தல் நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குட்பட்டு திமுகவின் பிரசார நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை சிப்காட்டை சுற்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்துவிட்டு சென்றார். ஆனால் ஆட்சியர் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனக்கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியில் திமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறி இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், வாக்குப்பதிவு தாமதமானது.
இதனையடுத்து,வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக அதிமுகவினரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அங்கு வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், எந்த அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற்று வருவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #localelection #tamilnadu #dmk #admk #சிறப்புசெய்திகள் #உள்ளாட்சிதேர்தல் #திமுக #அதிமுக