சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு படங்கள் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாத்த வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த எந்த இயக்குநரின் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரண்டு படமும் தனது மகள்களின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மகள்கள் சவுந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா தயாரிப்பில் தலா ஒரு படத்தில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதற்கான பணிகளில் மகள்கள் இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #cinema #rajini #superstar #சினிமாசெய்திகள் #சூப்பர்ஸ்டார் #ரஜினி