பொள்ளாச்சி அருகே தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் வேலுச்சாமி என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மரம் ஒன்றில் இருந்த பெரியளவிலான தேன்கூடு திடீரென கலைந்தது. இதனால் அதில் இருந்த தேனீகள் கூட்டமாக படையெடுத்து, இறுதிசடங்குக்கு வந்தவர்களை துரத்தியது. தேனியிடம் கடி வாங்காமல் தப்பிக்க அனைவரும் அந்த பகுதியில் இருந்து வேகமாக சிதறி ஓடினர்.
எனினும் பலரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியது. 20க்கும் மேற்பட்டவர்களை தேனீக்கள் கொட்டியது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினார். இந்தநிலையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த கொண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன் மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் சோகமடைந்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #pollachi #bees #சிறப்புசெய்திகள் #பொள்ளாட்சி #தேனீ