தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (6ம் தேதி) முதற்கட்ட தேர்தல் தொடங்கிய நிலையில் காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவின் முடிவில், 74.34% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 12ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தொடர்ந்து 4 நாள் விடுமுறை அளிக்கப்படும் என கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #police #kadaloor #காவலருக்குவிடுமுறை #கடலூர்எஸ்.பி #கடலூர்போலீஸ்