மிசோரம் மாநிலத்தில் கணவன் மனைவியை கொல்ல, பயன்படுத்திய திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன்முறைகளை கையாண்டும், கத்தியால் குத்துவது, விஷம் கொடுப்பது என அரங்கேறிய குடும்ப தகராறுகள், இன்று மனித வெடிகுண்டாய் ஒருவர் மாறும் நிலைவரை வந்துள்ளது.
பல காரணங்களுக்காக மனைவி, கணவனை கொல்ல முயற்சிப்பதும், கணவன்-மனைவியை கொல்ல முயற்சிப்பதும் நடக்கும் வேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரு கணவன், தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது 61 வயது மனைவியை மனித வெடிகுண்டாக மாறி கொன்றிருப்பது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மிசோரம் மாநிலம், லுங்க்லேய் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோமிங்கிலினா (62). இவருடைய மனைவி பை லாங்தியாங்லிமி (61). தங்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக, கணவனும், மனைவியும் கடந்தாண்டு பிரிந்தனர். மனைவி பிரிந்து சென்ற கோபத்தில், தன் உடலுடன் வெடிகுண்டை கட்டி வந்து, தன் மனைவியை கட்டிபிடித்து, வெடிகுண்டை வெடிக்க வைத்திருக்கிறார். இருவரும் சம்பவம் நடந்த இடத்திலயே பலியாகினர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newaupdate #humanbomb