மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதை 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.
ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேரை விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர்யன் கான் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்தநிலையில் 3 நாட்கள் காவல் முடிந்ததும் ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து ஆர்யன்கானை அக்டோபர் 11-ம் தேதி வரை விசாரிக்க வேண்டும் என்ற என்.சி.பி.யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கானை 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன்கான் ஜாமீன் கோரிய நிலையில் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன்கான் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newdupdate #sharukhan #aariyankhan