சென்னை திருவொற்றியூரில் பிரியாணி சாப்பிட்டு விட்டு கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மாமுல் கேட்ட ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா என்பவர் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.
இதனையடுத்து கடையின் உரிமையாளர் பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட போது கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் பணம் கேட்டுள்ளனர். மாமுல் கொடுக்காததால் கத்தியால் வெட்ட முயன்றனர்.
மேலும் காவல்துறையால் கூட என்னை பிடிக்க முடியாது என சவால் விட்டு விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடை உரிமையாளர் இதயதுல்லா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாய் பல்லு அப்பு (எ) டேனியலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி தலைமறைவாக உள்ள. லாலூ (எ) சாகுல்ஹமீது என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #bigness #breakingnews #neesupdate #சென்னை #chennai #பிரியாணி #biriyani