செய்திகள்
Trending

என்னங்க இது!!வாக்காளர் பட்டியலில் வடஇந்தியர்கள்!!! ஆர்.எஸ்.பாரதி புகார்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 3 ஒன்றியங்களில் 5,000 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்கள் பெயர்கள் இருப்பதாகவும் அதிமுகவினரால் திட்டமிட்டு இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

வட மாநிலத்தவர்

வருகின்ற 9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித்தேர்தலில் வாக்களிப்பதற்காக 06.10.2021 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ளடங்கிய திருப்பெரும்புதுர்,குன்றத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலும் வெளியிட்டுள்ள வாக்காளர் துணைப்பட்டியிலில் குறிப்பிடப்பட்டுள்ள
அனைத்து வாக்காளர்களும் தற்காலிகமாக கட்டிட பணியாற்ற வந்திருக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.

வாக்காளர் பட்டியல்

மேலும் இந்த வாக்காளர்கள் அனைவரும் போலியானவர்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் இந்த துணை வாக்காளர் பட்டியலில்
வாக்காளர்களுடைய புகைப்படம் இணைக்காமல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் நேற்று6.10.2021 முடிவடைந்த நிலையில், வெளியிடப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியல் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு சட்டப்படி ஏற்புடையதல்ல.

எனவே இத்தகைய போலி வாக்காளர்களுக்கு வாக்கு அளிக்க உரிமை இல்லை என்றும், அவர்களுக்கு வாக்கு அளிக்க அனுமதிக்கக் கூடாது என்பது சட்டத்தின் நிலைப்பாடு. இந்த துணைப் பட்டியிலில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அ.தி.மு.க.வினரால் வேண்டுமென்றே திட்டமிட்டு இணைக்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் ஆவார்கள்.

பஞ்சாயத்து சட்டம்

எனவே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் விதிமுறைகள் 1995க்கு முரணாக எந்தவித ஆதாரமும்
இல்லாமல்,புகைப்படமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த துணைப்பட்டியிலில் உள்ளடக்கிய போலி வாக்காளர்கள் அனைவரையும்
வருகின்ற 9.10.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்டஉள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தடை விதித்து, நியாயமான முறையில்
தேர்தலை நடத்திட உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து அனைத்து மேல் நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கேட்டுக் கொள்கிறேன்.

#visilmedia #todaynewstamil #topnews #bignews #breakingnews #newsupdate #tamilnadu #tamilnaduelection #electioncommission #northindian #உள்ளாட்சிதேர்தல்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button