செய்திகள்

விரல் ரேகை விழாமல் போனால்.. ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு..!

இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக, அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் ரேஷன் பொருட்கள் வாங்க வருவோர் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் கைரேகை பதிவு மிஷின் சர்வர் கோளாறு காரணமாக சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், கூட்டுறவு சங்க பதிவாளர். மாவட்ட வழங்கல் அலுவலர், மற்றும் உதவி ஆணையருக்கு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில்;

தெளிவின்மையால் விரல்ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருளை வழங்க வேண்டும்.


தொழில்நுட்பக்கோளாறால் ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருளை தர வேண்டும்.


ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்


முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால், உடனடியாக அவர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும்.


கடைக்கு வருவோரிடம் கனிவுடன் நடந்து கொள்வதுடன், அவர்களின் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து விரல் ரேகையை சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button