செய்திகள்

பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் ரூ.50,000 – விண்ணப்பிப்பது எப்படி..?

தமிழகத்தில் ஏழை எளிய பெண்களின் கல்வி, திருமணம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்பு நிதியாக ஓர் குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டு, அப்பெண் குழந்தை குறிப்பிட்ட வயதினை அடைந்த பிறகு முதிர்வு தொகை ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

இரண்டு பிரிவுகளின் கீழ் இத்திட்டத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. முதல் பிரிவின் கீழ், ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்துக்கு ரூ.50,000 உதவித் தொகை கிடைக்கும்.

இரண்டாவது பிரிவின் கீழ், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு குழந்தை ஒன்றுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும்.

டெபாசிட் காலத்திலிருந்து 5 வயது வரை மாதம் ஒன்றுக்கு ரூ.150 என்ற அளவில் கிடைக்கும். 18 வயது வரை இந்த உதவித்தொகை வந்துகொண்டிருக்கும். பெண் குழந்தையின் கல்விக்கு உதவும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுகிறது.

குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும்.

பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் தங்களது 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது. இத்திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தைகளை தத்தெடுக்கக் கூடாது.

மாவட்ட சமூக நல அதிகாரி, மாவட்ட திட்ட அதிகாரி, குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி, கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அதிகாரி போன்றோரை அணுகி இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

#visilmedia #todaynewstamil #topnews #news #newsupdate #bignews #breakingnews #tamilnadugovernment #governmentscheme #தமிழகஅரசு #பெண்கல்விஊக்கத்தொகை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button