அருணாச்சல பிரதேசம் தவாங்க் எல்லைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த 200 சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தைக்க் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத் வழியாக இந்தியா பகுதிக்குள் நுழைந்து சீன ராணுவ வீரர்கள் சிலர் ஆளில்லா பதுங்கு குழிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை தொடர்ந்து லடாக் முதல் அருணாச்சல் பிரதேசம் வரையிலான எல்லைப் பகுதிகளில் இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் lAC இன் இந்தியப் பகுதியில் சீனப்படை ரோந்து பணியில் அத்துமீறி ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அத்துமீறிய சீன வீரர்களை இந்திய இராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளனர்.
அதை தொடர்ந்து ராணுவ கமாண்டோக்கள் மட்டத்தில் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நட்ந்த பேச்சுவார்த்தையின் முடிவாக சீன வீரர்களை இந்தியா விடுவித்துள்ளது. எனினும் இந்த தகவல் தொடர்பாக இந்திய தரப்பில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்வதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமே இங்கு கருத்து வேறுபாடுகளை மறந்து அமைதி ஏற்படுவது சாத்தியமாகும் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #newsupdate #bignews #breakingnews #indianarmy #chinasoldiers