ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இந்த நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கு ஒன்றிய அரசு 2011-ம் ஆண்டு முதல் 30,000 கோடி ரூபாய் வரை பங்களிப்பு செய்துள்ளது என்றாலும், நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாகத் தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்தது.இதன் தொடர்ச்சியாக, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தைக் கையகப்படுத்த டெண்டர் கோரப்பட்டது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது.இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
#visilmedia #todaynewstamil #topnews #news #newsupdate #bignews #breakingnews #TATA #AirIndia #சிறப்புசெய்திகள் #டாடாநிறுவனம் #ஏர்இந்தியா