கவிஞர் பிறைசூடன் வயது மூப்பு காரணமாக இயற்கையை எய்தியுள்ளார்.
சென்னையில் உள்ள நெசப்பாக்கம் வீட்டில் இருந்த கவிஞர் பிறைசூடன் (வயது 85), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இயற்கையை எய்தியுள்ளார்.
400 திரைப்படங்களில் 1,400 பாடல்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள், 100 தொலைகாட்சி தொடர்களுக்கு பாடல்கள் ஆகியவற்றை எழுதியவர் என்ற பெருமைக்கும் பிறைசூடன் உரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறைசூடன் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார்.
இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். இவரது மறைவு திரைப்பட ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமாசெய்திகள் #பிறைசூடன் #