தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி முத்துமாரி(55).
இவர் கணவரை பிரிந்து கடந்த 15 வருடங்களாக தனது மகள்கள்
யுவராணி(21)
கல்லூரிமாணவி, நித்யா(17) பள்ளி மாணவி ஆகியோருடன்
தனியாக வசித்து வந்தார்.
முத்துமாரிக்கு உடன் பிறந்த தம்பி ஆண்டவர் குடும்பத்தினருடன் சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில்
இன்று காலையில் முத்துமாரி வீட்டின் அருகில் இருந்தவர்கள் முத்துமாரி வீட்டுக்குச் சென்று கதவை தட்டிய போது கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வீட்டைத் திறந்து பார்த்ததில் தாய் மற்றும் இரு மகள் 3 பேரும் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்களா? இல்லை இவர்களை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் சொத்துப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்