தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு வாகன அணி 12ல் இருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு வாகன அணிவகுப்பு 12ல் இருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வாகனத்துடன் பாதுகாப்புக்காக செல்லும் வாகன அணியின் எண்ணிக்கையை குறைத்து, முதல்வர் ஸ்டாலினின் பயணத்தின் போது, மக்களின் வாகனங்களை நிறுத்தாமல் பொதுமக்களின் வாகனங்களுடனே சேர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே முதல்வரும் செல்லும் வகையில் ஏற்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக முதல்வரின் பாதுகாப்பிற்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும். அந்த வாகனங்களில் எண்ணிக்கை தற்போது ஆறாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #முதல்வர் #முகஸ்டாலின்