நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது.
இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். புலியை சுட்டுக் கொல்ல ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் படி, புலியை பிடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. வனப்பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.
இதுவரை தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 4 மோப்ப நாய்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீலகிரி- தேவன் எஸ்டேட்டில் கடந்த 29ம் தேதி T23 புலியை தேடி வனத்துறையினர் சென்றபோது T26 புலியானது பயத்தில் பாய்ந்து ஓடிய காட்சி இணையத்தில் வைரலாகிறது…
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஆட்கொல்லிபுலி #T29புலி