தக்காளி ஒரு கிலோ தற்போது 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அத்தியாவசிய காய்கறிகளில் ஒன்றான தக்காளி விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கமாக இருக்கும். தக்காளி விளைச்சல் அதிகமாகும்போது, கிலோ 2 ரூபாய் என மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.
சில சமயங்களில் தக்காளிகளை செடிகளிலேயே பறிக்கப்படாமல் விட்டு விடுவதுமுண்டு. கடந்த வாரம் சென்னையில் நாட்டு தக்காளி கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் தக்காளிகள், அழுகும் நிலை ஏற்பட்டு சந்தைக்கு வரத்து குறைத்துள்ளது.
இதனால் சென்னை கொத்தவால் சாவடியில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 20 ரூபாய் அதிகரித்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பெங்களூரு தக்காளியும் 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கினால் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தக்காளி