இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, திமுகவில் அண்ணா படம் தற்போது உள்ளதா?
தற்போது திமுகவில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே உள்ளன.
தொடர்ந்து, அதிமுகவில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. இளைஞர்களுக்கு புதிய பதவி பொறுப்புகள் கொடுக்க வேண்டும், தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு அதிமுகவில் என்ன நடந்ததோ அதுவே தற்போது மீண்டும் நடந்திருப்பதாக சசிகலா கூறியிருந்தார். இது குறித்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் சசிகலா கூறியதாக வெளியிடப்பட்டிருந்த செய்தியில், “நமது ஒரே நோக்கம், இதய தெய்வம் அம்மா அவர்கள் சொல்லி சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பற்றி நாம் கவலை படக் கூடாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள்.
தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு இதய தெய்வம் அம்மாவுடன் கூட இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு என்ன நடந்ததோ அதுவே மீண்டும் நடந்துள்ளது. எனவே நான் கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும்.
இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு துளிகூட மாறாமல் நாம் முயற்சி செய்து நல்லபடியாக வெற்றி வாகை கூட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, எண்ணம் என்று அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #admk #அதிமுக #செல்லூர்ராஜூ