இனிமேல் தினமும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளதால் பொதுமக்கள் கலங்கி போயுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கே மின் வினியோகம் இருக்கும் என்றும் அதன் பின்னர் மாநிலம் இருளில் மூழ்கும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் திகலை கிளப்பி உள்ளார்.
பல்வேறு மாநிலங்களும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் மின் வினியோகித்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில் இனி நாள்தோறும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு என்ற அறிவிப்பால் மக்கள் கலங்கி போயுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த 3 மணி நேரம் மின்வெட்டு என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு மக்களை அதிர வைத்துள்ளது.
இதை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தில் இனி மின்வெட்டு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மின்வெட்டு #powercut #பஞ்சாப்