திருப்பூரில் புதுமாப்பிள்ளை ஒருவர் நகைகளை இழந்ததோடு,புது மனைவி ஒரு இரவு மட்டும் இருந்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் பல வருடமாக பெண் தேடியுள்ளார்.
ஆனால் பெண் அமைவில்லை. இதனால், திருமணம் புரோக்கர்களை நாடினார்.
ஈரோட்டில் உள்ள ஒரு புரோக்கர் மூலம் திருப்பூர் பூலுவபட்டியில் உள்ள புரோக்கரின் அறிமுகம் கிடைத்தது. மூவரும் சேர்ந்து பூலுவப்பட்டியில் 25 வயது பெண் ஒருவரை பார்க்க சென்றனர். பெண்ணை பார்த்ததும் அந்த இளைஞர் ஓகே சொல்லி விட்டார்.
பெண்ணுக்கு தாய், தந்தை இல்லாததால் தாலி, தோடு உள்ளிட்டவற்றை மாப்பிள்ளை தான் போட வேண்டும் என்றும், புரோக்கர் கமிஷனாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் தர வேண்டும் எனவும் கூறினர். அதற்கு அந்த இளைஞர் சரி என்று சொல்லிவிட்டார்.
இதனையடுத்து புரட்டாசி என்று கூட பாராமல் தடபுடலாக திருமணம் நடத்தியுள்ளனர். மணமகன் தனது உறவினர்கள் முன்னிலையில் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மாப்பிள்ளை வீட்டிலிருந்து உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆனால் பெண் வீட்டிலிருந்து பெரியம்மா என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணும், அக்காள் முறை என்று கூறிக்கொண்டு ஒரு பெண் மற்றும் புரோக்கர்கள் மட்டும் வந்துள்ளனர்.
திருமணமான ஒருநாள் மட்டும் மணமகனுடன் குடும்பம் நடத்திய பெண் மறுநாள் பட்டுப்புடவையுடன் காரில் ஏறி வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பின்னர் பெண்ணின் செல்போனுக்கு முயற்சி செய்தபோது ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
இதைடுத்து புரோக்கரை தொடர்பு கொண்ட போது அவரும் சரியான பதிலை கூறவில்லை. அப்போதுதான் அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டு தாலி, தோடுடன் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அந்த இளைஞர் கடும் விரக்தியில் உள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்