தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள குருக்குசாலை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மனைவி ராமலட்சுமி இவரது கணவர் கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார் இதனால் இவர் கடந்த 2014ஆம் வருடம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்காலிக கணினி இயக்குனராகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பணிக்கு சேர்ந்தது முதலே வட்டார ஊராட்சி அலுவலக ஓட்டுநராக உள்ள கனகராஜ் இவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து இக்கொடுமைகள் அனைத்தும் சகித்துக்கொண்டு உயரதிகாரியிடம் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.
பின்னர், அங்கு வேலை செய்யும் அனைவரும் 6மணி அளவில் பணி முடிந்து வீடு திரும்பும் நிலையில் ராமலட்சுமியை மட்டும் மணிக்கணக்காக வேலை வாங்குவதாகவும், இதனால் மனமுடைந்த அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தூத்துக்குடி #மாவட்டஆட்சியர்அலுவலகம் #தீக்குளிப்புமுயற்சி