சினிமா

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார்!!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருந்த பிரபல நடிகர் நெடுமுடி வேணு, சற்று முன்னர் காலமானார்.அவருக்கு வயது 73.

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவர், தமிழில் ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாளமயம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

1978ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். மூன்று முறை தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.



நெடுமுடி வேணு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில், நேற்று (10ம் தேதி) அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானார்.

மறைந்த நடிகர் நெடுமுடி வேணுவுக்கு, கேரளா மற்றும் தமிழ்த் திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button