உள்ளாட்சி தேர்தலின்போது வாக்குச்சீட்டில் சின்னம் இடம் பெறாதது மற்றும் சாவடி மாறி வாக்காளர்கள் வாக்களித்தது ஆகிய காரணங்களால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது.. இதில் மொத்தமாக 78.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது..
அதிகபட்சமாக விழுப்புரத்தில் 85.31 சதவிகித வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 82.59 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ராணிப்பேட்டை
அதேபோல, ராணிப்பேட்டையில் 82.52 சதவிகிதம், வேலூரில் 81.07 சதவிகிதம், நெல்லையில் குறைந்தபட்சமாக 69.34 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது.. இந்த 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இடைத்தேர்தல்களில் மொத்தமாக 70.51 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.. அதேபோல, சிவசைலம் ஊராட்சி, 3-வது வார்டில் நடந்த மறு வாக்குப்பதிவில் 80.79 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள்..
வாக்கு பெட்டிகள்
2 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இடம்பெற்ற வாக்குப் பெட்டிகள், 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன… அங்கு தற்போது 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மறுவாக்கு பதிவு
இந்த வாக்குப்பதிவுகள் அனைத்தும் அமைதியான முறையில் நடந்து முடிந்தாலும், காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டில் தவறான சின்னம் பதிவாகி இருந்தது… இதனால் வாக்குச்சாவடி எண் 173-ல் மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் 1-வது வார்டு உறுப்பினர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த வார்டுக்கான வாக்குச்சீட்டுகள், தவறுதலாக 2-வது வார்டுக்கு வழங்கப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.. எனவே, பூந்தமண்டலம், ஆலப்பாக்கம் என்ற இந்த 2-வது வார்டுக்கும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது… ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. மொத்தம் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #உள்ளாட்சித்தேர்தல் #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு