அமைச்சர் சேகர் பாபு குழம்பி போயுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு வெளியிட்டுள்ள பயின்ட்ல கோவிலை திறக்க ஆர்டர் மிக தெளிவாக இருக்கிறது.
அவர் வேண்டும் என்றால் இந்த பாயிண்டை விவாதிக்கலாம், சாவல் விடலாம் கட்சியில் இருந்து நாங்க யாரையாவது அனுப்பி விடுறோம். அவர்கிட்ட உட்கார்ந்து அவர் பேசட்டும். அவர்களுடைய கடவுள் இல்லை என்ற கொள்கையை புகுத்துவதற்காக இந்த டிராமா செய்வதை திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்திவிட்டு உடனடியாக கோவில்களை திறக்கவேண்டும், 10 நாள் கெடு கொடுத்திருக்கிறோம்.
அமைச்சர் சொல்லி இருக்காரு, ஆயிரம் பாஜக வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது என்று. நூறே நூறு பூத் தலைவர்களை அனுப்புறேன் திமுகவை அசைத்துக் காட்டுறோம். 100 பூத் தலைவர்களை அனுப்புகிறோம். சேகர்பாபு குழம்பி போய்விடுகிறார். அதிமுகவில் இருந்து வந்துள்ளார் பாவம், ஏனென்றால் அவர் கிட்சென் கேபினேட்க்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு.
எப்படி நம்முடைய முதல்-அமைச்சரின் துணைவியாரை கோவிலுக்கு கூட்டிட்டு போக அக்கறை காட்டுகிறாரோ, அவர் 2 கிலோமீட்டர் நடை பயணமாக யாத்திரை போகவேண்டும் என்று நினைக்கும்போது அக்கறை காட்டுகிறாரோ அதே போல இங்கே இருக்கும் சாதாரண சகோதர சகோதரிகளுக்கு அந்த அக்கறையை காட்டட்டுமே.பூ விற்பவர்கள், தேங்காய் விற்பவர்கள் அவர்களுக்கு இந்த அக்கறையை காட்டட்டுமே என தெரிவித்தார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகஅரசியல் #bjp #பாஜக #dmk #திமுக #அண்ணாமலை #annamalai #அமைச்சர்சேகர்பாபு #சேகர்பாபு