ரயில் நிலையங்களில் பான் மற்றும் புகையிலைப் பொருட்களை மென்று துப்பவர்களால் ஏற்படும் கரையை அகற்ற ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடியும், தண்ணீரும் செலவாகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் பான் மற்றும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் பயணிகள், ரயில் நிலையங்களில் அதன் எச்சிலைத் துப்பி வைக்கின்றனர். இதனால் பல இடங்களில் கரை படிந்து பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. இவற்றைச் சுத்தம் செய்வதற்கு இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 கோடியை செலவு செய்வதாகவும், இதற்காக பல லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த செலவைக் குறைப்பதற்கு கையடக்கத் பை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது ஐந்து மற்றும் பத்து ரூபாய்க்கு தான் இருக்கும். இந்த பைகளைப் பயன்படுத்தி 15 முதல் 20 முறை எச்சில்களை துப்பலாம். ஒரு வேளை இதை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்தாலும் அது மண்ணோடு மண்ணாக மக்கி விதையாக முளைக்கத் தொடங்கிவிடும். அந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரயிலும், ரயில் நிலையங்களும் மாசடைவது தவிர்க்கப்படுகின்றது. பல கோடி ரூபாய் மிச்சமாகும் என ரயில்வே நிர்வாகம் நம்புகின்றது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #Centralgovernment #indianrailway