மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிவீட்டுக்கு திருடச் சென்ற கொள்ளையர்கள், அங்கு எதுவும் இல்லாத விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.
தேவாஸ் மாவட்டம் கதேகான் பகுதியை சேர்ந்த நீதிபதி திரிலோச்சின் கவுர் என்பவருக்கு, தேவாஸ் பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. ஆனாலும் அவர் கதேகான் பகுதியில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வப்போது தேவாஸில் உள்ள வீட்டுக்கு சென்றுவருவார்.
கடுமையான பணி சூழல் காரணமாக கடந்த 15 நாள்களாக இவர் தேவாஸ் பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு செல்லவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்தவீட்டுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நகரின் முக்கியப்பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் பூட்டின் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் கலைந்து கிடந்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வீட்டில் ஆய்வு செய்த போது கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.அந்த கடிதத்தில், பணம் இல்லாத வீட்டை எதற்கு பூட்டி வைத்திருக்கிறீர்கள் என்று திருடர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
வீட்டில் இருந்த 30,000 ரூபாய் ரொக்கம் மற்றும் சில தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்பகுதியில் அரசு அதிகாரிகள், நீதிபதிகள், எம்.பியின் வீடு அமைந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொள்ளையர்கள் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியுள்ளதால் விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திருடன் #திருட்டு