தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 74 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் பகுதியில் வாக்குப் பெட்டிகளை பிரித்து வாக்குகளை தரம்பிரித்து எண்ணிக் கொண்டிருந்தபோது ஒரு சில வாக்காளர்கள் வாக்கு சீட்டு பதிலாக தவறுதலாக தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வாக்கு பெட்டிக்குள் போட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வாக்காளர்அட்டை