திருநெல்வேலி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த அய்யாதுரை என்ற பீர் மகன் கோதாரி (27).
இவர், இன்று (12ம் தேதி) காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போலீசார், கோதாரி உடலை மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோதாரியின் தந்தை அய்யாதுரை என்ற பீர் அப்பகுதியில் உள்ள கல்வெட்டாங்குழியில் நேற்று (11ம் தேதி) மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அடுத்த நாள் மகன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் குறித்து சிவந்திபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திருநெல்வேலி #crime #கொலை