தமிழகத்தில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக,74 வாக்கு எண்ணும் மையங்களில் 31,245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் 460 வாக்குகள் பதிவான நிலையில் 459 வாக்குகள் மட்டுமே இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஓட்டுகாணும் #உள்ளாட்சிதேர்தல் #வாக்குஎண்ணிக்கை