செய்திகள்
Trending

விஜய் ரசிகர் மன்றத்தினர் 49 இடங்களில் வெற்றி!!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கி இருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர்.

விஜய்யின் அனுமதியுடன் அவரது புகைப்படத்தினை அச்சிட்டு பிரச்சாரம் செய்து போட்டியிட்டனர்.

இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட மன்ற நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தனர். அப்போதே இந்த மன்றத்தில் உற்சாகமடைந்து காணப்பட்டனர். இந்த நிலையில் தற்போது வாக்குஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது மாலை 4.30 மணி வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் என்று தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடப்பாடி4ஆவது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன் வெற்றி பெற்றுள்ளார். அதே போல், மாமண்டூர் இரண்டாவது ஊராட்சியில் 2 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட லோகநாதன் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் கருப்படித்தட்டை காந்தி நகர் 1ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் எம். பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் விஜய் மக்கள் மன்றத்தினர் மேலும் பல இடங்களில் வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #vijay #விஜய்ரசிகர்மன்றம் #உள்ளாட்சிதேர்தல் #விஜய்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button