தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போதுவரை ஆளுங்கட்சியான திமுக பெருவாரியாக முன்னிலையில் உள்ளன.
வாக்கும் எண்ணிக்கையின்போது பல்வேறு இடங்களில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒருசில இடங்களில் மோதல், அதிகாரிகளுடன் வாக்குவாதம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. அதேபோல் வாக்கு எண்ணும் பணியில் உள்ள பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படாததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
அதாவது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் 85 பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனாது. அனைவருக்கும் உணவு வந்த பின்னர் தான் வாக்கு எண்ணும் பணி துவங்கும் என அலுவலர்கள் அறிவித்தனர்.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து நடத்த வேண்டும் என வேட்பாளர்கள் தரப்பினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அங்கு பணியில் இருந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கடையநல்லூர் #உள்ளாட்சிதேர்தல்