ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று ஒரு மணி நேரத்தில் 22 பேரை கடித்துத்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சோளிங்கர் பேருந்து நிலையம் பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவது குறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சியிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சோளிங்கர் பேருந்து நிலையம் பகுதியில் வெளிநாய் ஒன்று திடீரென சாலையில் நடந்துச்சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை கடித்து குதறியது. அந்த நாய் ஒரு மணிநேரத்தில் 22 பேரை கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாய் கடித்ததில் படுகாயமடைந்தவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் தேவையில்லாமல் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
சாலையில் நடந்துச்சென்றவர்களை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அறிந்த ராணிப்பேட்டை மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம் இது போன்று எதிர்காலத்தில் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வெறிநாய் #நாய்கடி #dogbite