புதுச்சேரியில் அடுத்தாண்டிற்கான அரசுவிடுமுறைப் பட்டியலில் இருந்து மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கான அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
புதுச்சேரி அரசு சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . இந்தப் பட்டியலில் மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2காந்தி ஜெயந்தி ஆகிய தினங்கள் சேர்க்கப்படவில்லை .
இதனால் தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக , குற்றச்சாட்டு எழுந்துள்ளது . ஆனால் தொழிலாளர் தினம் , காந்தி ஜெயந்தி ஆகிய இரு நாட்களும் , ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் , அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவுப்படியே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் அரசு விடுமுறை தினங்களை ரத்து செய்வது , வழக்கமான நடைமுறை தான் என உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மே 1ஆம் தேதி விடுமுறை ரத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐயூடியூசி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை வலியுறுத்தின.
தொழிலாளா்கள் போராடி பெற்ற உரிமைகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி தொழிலாளா் தினமாக அறிவிக்கப்பட்டு, அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பாண்டிச்சேரி #pondicherry #மே1 #அக்டோபர்2 #may1 #october2