தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்க துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து துணை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கடந்த 11-ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி தீபாவளி-2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் நவம்பர்-2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் அதிகபட்சமாக முன் நகர்வு முழுமையாக முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை திறக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்சமாக முன் நகர்வினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3ம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை அனைத்து மாவட்ட உதவி ஆணையர் மற்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ரேஷன்கடை #தீபாவளி #rationshop #deepavali