செய்திகள்
Trending

என்னா அடி!! மாணவர்களை மிருகத்தனமாக தாக்கும் அரசு பள்ளி ஆசிரியர்…!!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

கடலூர் (Cuddalore) மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவன் (School Student) ஒருவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்தார். இதனால் கடுப்பான ஆசிரியர் அவரை முட்டிபோட வைத்துள்ளார்.

பின்னர் அங்கு இருந்த பிரம்பால் அந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அந்த ஆசிரியர் இதோடு நிற்காமல் அந்த மாணவரை தனது கால்களால் எட்டியும் உதைத்ததுடன் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இயற்பியல் வாத்தியார் மாணவன் வகுப்பிற்கு தாமதமாக வந்ததால் அந்த மாணவனை காலால் எட்டி உதைத்து இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார் .

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசுபள்ளிகள் #தமிழ்நாடு #ஆசிரியர்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button