அரசியல்
Trending

“இத்தனை ஆண்டுகால பாரத்தை இறக்கி விட்டேன்” – சசிகலா

ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா, கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசி வந்தார். இதனால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறார் என கணிப்புகள் வெளிவந்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் அமமுக சார்பாக பரப்புரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.

இந்நிலையில், ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் சென்றார் சசிகலா. அவருடைய வருகையை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் நினைவிடம் வரும் சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் மெரினாவில் குவிந்தனர்.

முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா பயன்படுத்திய காரில், அதிமுக கொடியுடன் இன்று காலை 10.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் நினைவிடம் நோக்கி புறப்பட்ட சசிகலா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபோது சசிகலாவுக்கு கண் கலங்கியது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இத்தனை ஆண்டுகாலமாக மனதில் வைத்திருந்த பாரத்தை நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். அதிமுகவை ஜெயலலிதா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்” என்று கூறினார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல்செய்திகள் #சசிகலா #அதிமுக #சின்னம்மா #புரட்சிதாய் #Sasikala #Chinnammaa #ADMK

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button