சொத்து குவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்த பிறகு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை ஆகிறார்.
இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்த அவர், அபராத தொகையை செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு தண்டனை அனுபவித்த நிலையில், இன்று விடுதலை ஆனார்.சிறையில் இருக்கும் சுதாகரனின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை வரவேற்று அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தியதால், அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்த பிறகு அபராத தொகையை செலுத்தாததால் கூடுதலாக சுதாகரன் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல்செய்திகள் #சுதாகரன்