நாடு முழுவதும் அடுத்த மாதம் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், “கொரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர்.
காற்று மாசு காரணமாக தங்கள் மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறேன். இருப்பினும், உச்சநீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பட்டாசு #fireworks #mkstalin #முகஸ்டாலின்