தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடிக்கம்பம் ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு யாரோ சில சமூக விரோதிகள் அதிமுக கொடிக் கம்பத்தில் ஏற்றி வைத்திருந்த கொடியை அகற்றிவிட்டு, காலணிகளை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலையில், கொடிக்கம்பத்தில் காலணி இருப்பதைக் கண்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், கொடிக்கம்பத்தில் இருந்து காலணிகளை அகற்றினர்.
இதையடுத்து அதிமுகவினர் அந்த கொடிக்கம்பத்தில் புதிய கொடியை ஏற்றி வைத்தனர். அதிமுக கொடியை அவமதித்த மர்மநபர்களை கண்டுபிடித்து கைது செய்யும்படி போலீசாரிடம் அதிமுகவினர் புகார் கொடுத்தனர். அதிமுக 50வது ஆண்டுவிழா கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில் பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடிக்கம்பத்தில் காலணிகளை ஏற்றி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல் #அதிமுக #அதிமுக_கொடிகம்பம்_காலணி