வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு பருவ மழை தீவிரமாக உள்ள நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.
இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் மே.மாத்துாரில் 7 செ.மீ., மழை பெய்து உள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதியை இன்று கடக்கும்.
அரபிக் கடலில் மத்திய கிழக்கு, தென் கிழக்கு மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கேரளா- – லட்சத்தீவு கடலோர பகுதியை இன்று கடக்கும். இதனால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் : கார்த்திக் பாலாஜி, கோவை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வானிலை #கனமழை வளிமண்டல_மேலடுக்கு_சுழற்சி #தமிழ்நாடு