கொரோனா என்னும் கோரத் தாண்டவத்தால் பல லட்சம் உயிர்கள் பலியாகின இதில் தொண்டுள்ளம் படைத்த அநேகர் பல்வேறு உதவிகளை பலவாறு செய்து வருகின்றனர், அதுபோல பஹ்ரைன் நாட்டில் இயங்கி வரும் அந்நாட்டு அரசிடம் முறையான பதிவும் அங்கீகாரமும் பெற்ற
பஹ்ரைன் தமிழ்ச்சங்கத்தின் 27 வருட கோரிக்கையான புலம் பெயர் தமிழர் நலவாரியம் தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை கொண்டாடும் வகையில் பக்ரைனில் இருக்கும் பாரதி தமிழ் சங்கம், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சத்தி இருபத்தி இரண்டாயிரத்தை அச் சங்கத்தின் தமிழக தொடர்பாளர் நாகை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்ட பணத்தின் வங்கி காசோலையை அண்ணா அறிவாலயத்தில் வழங்கினார் . காசோலையைப் பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் பாரதி தமிழ்ச் சங்கத்திற்கும் கொடை உள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நாகை செய்தியாளர்: ச.ராஜேஷ்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #கொரோனா #கொரோனாநிவாரணநிதி #பஹ்ரைன்