நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது.
அதனனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு காவல்துறையினர் அழைப்பு வந்த செல்போன் எண்ணை ஆராய்ந்து பார்த்தனர். மேலும் மோப்ப நாய் உதவியோடு வந்த போலீசார், சரத்குமாரின் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அழைப்பு வந்த செல்போன் எண் விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியை சேர்ந்த மணிபாலன் என்பவருடையது என தெரியவந்தது. நீலாங்கரை உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் சென்று விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ்(20), என்ற நபர் தான் செல்போனை எடுத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #சரத்குமார் #வெடிகுண்டுமிரட்டல்