மதுரை மாவட்டம் மேலூர் அருகே கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த மாணவிகள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளபட்டியில் உள்ள சிறுவாழை கண்மாயில் அந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் இரண்டு பேர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி மாயமானார்கள்.
மாணவிகள் மாயமானதை அறிந்து கண்மாயின் குளித்த பெண்கள் பதறிப்போய் சத்தம் போட்டனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாணவிகள் மாயமான இடத்தில் மூழ்கி தேடினர். அப்போது சவிதா (11) , ஆண்டிச்சி (14) ஆகிய இரு மாணவிகளும் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து மாணவிகள் இருவரையும் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மாணவிகளை பரிசோதித்த மேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
உடலை கைப்பற்றிய மேலவளவு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் இறப்பு தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மதுரை #madurai