க்ரைம்

சூட்கேஸிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வடமாநில பெண்…! காத்திருந்தது அதிர்ச்சி!!!!

சேலத்தில்பெங்களூருவைச்சேர்ந்தபெண்ணைகொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான சண்முகா அடுக்குமாடி குடியிருப்பில் பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான தேஜ்மண்டல் (27) என்பவர் தனது கணவர் பிரதாப் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு தங்கியிருந்ததார்.

பிரதாப் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப் கடந்த சில நாட்களாக சென்னையில் இருப்பதாகவும், தேஜ் மண்டல் தனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


இதனையடுத்து உரிமையாளர் நடேசன் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து உடனடியாக நடேசன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதகவை உடைத்து பார்த்த போது வீட்டின் பரண் மீது ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது. மேலும் அதிகபடியான துர் நாற்றமும் வீசியுள்ளது.

உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்த போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டின் உரிமையாளர் நடேசன், கொலை செய்யப்பட்ட பெண் தேஜ் மண்டல் என்பதை உறுதி செய்தார். கடந்த ஒரு வருடமாக குமாரசாமிப்பட்டி பகுதியில் குடியிருந்து வரும் தேஜ்மண்டல் பாலியல் தொழிலில் ஏற்கனவே பிடிபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்ததாகவும், இவர் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பழைய வழக்குகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, தேஜ்மண்டல் யார் யாருடன் தொடர்பிலிருந்தார் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா சமீபத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதத்தில் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட காவல்நிலையத்தில் அழகு நிலையத்தில் தேஜ் மண்டல் மீது விபச்சாரம் நடத்தியதாக வழக்கு உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #வடமாநிலபெண் #சூட்கேஸ் #Suitcase #crime

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button