செய்திகள்டிரெண்டிங்
Trending

ஒத்த ஓட்டு பாஜக..! துபாய் வரை சென்ற பாஜகவின் புகழ்…!

சமீபத்தில் நடந்து முடிந்த கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் போட்டியிட்டார்.

இவர் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் கிடைத்தது. பாஜகவைச் சேர்ந்தவர்களே இவருக்கு வாக்களிக்காமல் படுதோல்வியை பரிசாக அளித்திருக்கிறார்கள்.

பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் வெறும் ஒரு ஓட்டு பெற்று படுதோல்வி அடைந்த நிலையில், #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_Vote_BJP ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

இந்நிலையில், துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியின் போதும் பாஜகவின் மானம் கப்பலேறி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியின்போது, மைதானத்தில் அமர்ந்து போட்டியைப் பார்த்த ரசிகர் ஒருவர் ‘ஒத்த ஓட்டு பாஜக’ என எழுதிய பதாகையை வைத்திருந்தார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பாஜகவின் தோல்வி புகழ் துபாய் வரை பரவி இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஒத்த_ஓட்டு_பாஜக #Single_Vote_BJP #Dubai #துபாய்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button