கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக கேரளாவில் இதுவரை 18 பேர் வரை பலியாகி உள்ளனர்.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் கேரளாவில் தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்கு கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் இடுக்கி, கோட்டயம், மலப்புரம் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இடுக்கியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதேபோல் ராஜமாலா பகுதியில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 65க்கும் அதிகமானோர் பலியானார்கள். பல தமிழர்கள் இந்த நிலச்சரிவில் மரணம் அடைந்தனர்.
எத்தனை பேர்?
இந்த நிலையில் தற்போது மீதும் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 4 வீடுகள் வரை மண்ணில் மூழ்கி உள்ளது. இங்கும் பல இடங்களில் வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. 100க்கும் அதிகமானோர் தற்போது மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நிலச்சரிவு மூலம் மட்டும் 9 பேர் பலியாகி உள்ளனர்.
ஒரே குடும்பம் 3 பேர்
கேரளத்தில் கூட்டிக்கல் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர். பலப்பள்ளி அருகே இருக்கும் ஒட்டலங்கால் என்றால் வீட்டில் உள்ள 6 பேரும் இந்த நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். இதில் 3 பேரின் உடல் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
எப்படி ஏற்பட்டது?
இரண்டு நாட்களாக மழை பெய்த போதே இந்த நிலச்சரிவு எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நேற்றே பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். நேற்று இடுக்கியில் மழை காரணமாக பல்வேறு பாறைகள், மரங்கள் இடுக்கி மலை பகுதியில் இருந்து விழுந்தன. இதனால் மண்ணில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டு அது நிலச்சரிவை ஏற்படுத்தியது.
சுற்றுவட்டார ஆறுகள்
இடுக்கியை சுற்றி இருக்கும் பெரும்பாலான ஆறுகள், மலை அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இது நிலச்சரிவை மேலும் துரிதப்படுத்தியது. இதனால்தான் நேற்று இரவும், இன்று அதிகாலையும் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு தொடர்ந்து மழை பெய்வதால் இடுக்கி, கோட்டயம், மலப்புரம் ஆகிய பகுதிகளில் மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2020க்கும் பின் அங்கு ஏற்பட்ட இன்னொரு பேரிடராக இது பார்க்கப்படுகிறது.
ராணுவம்
இந்த நிலச்சரிவு வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதேபோல் இடுக்கியில் பல்வேறு அருவிகளில், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளமும் வீடியோ காட்சிகளாக வெளியாகி உள்ளது. தற்போது அங்கு மீட்பு பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இடுக்கியில் தற்போது ராணுவத்தினரும், துணை ராணுவ படையினரும் மீட்பு பணியில் களமிறக்கப்பட உள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கேரளா #இடுக்கி #நிலச்சரிவு