தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கப்பட்டது.
அ.தி.மு.க தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 50-வது ஆண்டில் இன்று முதல் அடியெடுத்து வைக்கிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொன் விழாவை கொடியேற்றத்துடன் தொடங்கி வைத்தனர்.
பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க.வின் பொன்விழாவை தமிழகம் முழுவதும் அ.தி.மு..க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அ.தி.மு.க 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது தவிர சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் வாணியம்பாடி மாவட்ட அ.தி.மு.க அலுவலகம், காமராஜபுரம் ,சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் நிர்வாகிகள் எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழுப்புரம் அ.தி.மு.க அலுவலகத்தில் நடைப்பெற்ற 50-வது ஆண்டு பொன் விழாவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணித்தும் கட்சி கொடி ஏற்றினார்..
பின்னர் ஜெயலிதா, எம்ஜிஆர் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் ஆதரவற்ற மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கினார். கரூர் மாவட்டம் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #அதிமுக_பொன்விழா #AIADMK #ADMK