செய்திகள்

100 அடித்தது டீசல்!! கேக் வெட்டி கொண்டாடிய லாரி உரிமையாளர்கள் ..!!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டியுள்ளது. லாரி உரிமையாளர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இதன்காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி ஒரு லிட்டர் 100 ரூபாய் 5 பைசாவாக விற்கப்படுகின்றது. மேலும் பெட்ரோல் விலை 104 ரூபாயை தொட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி, பேருந்து, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி எதிர்கட்சிகள், வாகன உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். எனினும் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மன வேதனையை மகிழ்சியுடன் கொண்டாடும் விதமாக பெரியகுளம் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நுதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் பங்க் முன்பாக கேக் வெட்டி கொண்டாடி ஒன்றிய அரசுக்கு தங்கள் வருத்ததை மகிழ்ச்சியாக தெரிவிப்பதாக கூறி வெட்டிய கேக்கை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி தங்கள் வருத்ததை தெரிவித்தனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீல்சல் விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கை எடுபார்கள் என்று நம்பி நூதன முறையில் டீசல் விலை உயர்வை மகிழ்சியுடன் கொண்டாடி வருத்தத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பெட்ரோல் #டீசல் #டீசல்விலை #PetrolPrice #DieselPrice

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button