தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் மழை காரணமாக அணைக்கு அதிக நீர் வருவதால், அணைகளில் இருந்து விநாடிக்கு 25ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வானிலை #கனமழை #பள்ளிவிடுமுறை